top of page
Writer's pictureEekai

முன்னாள் ரீவீஐ நிறுவனத்திடமிருந்து ஈகை அறக்கட்டளைக்கென ஒருமில்லியன் டொலருக்கும் அதிகமான ஆரம்பநிதி

3859801 Canada Inc. (முன்னைய தமிழ்விஷன் இங்க்)

ரொரன்ரோ, ஒன்ராரியோ.


உங்கள் அனைவருக்கும் குதூகலமான தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.


இந்த நல்ல பொழுதிலே முன்னைய ரீவீஐ நிறுவன நிதிப்பங்களிப்பின்மூலம் உருவாகும் ஈகை அறக்கட்டளையின் அங்குரார்ப்பணம்பற்றிய நல்ல செய்தியை உங்களிடம் கொண்டுவருகிறோம்.


2016ஆம் ஆண்டு டிசம்பர், 30ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையைத் தொடர்ந்து பெரும்பகுதியான கடன்களை அடைத்த நிலையில் நாம் இப்போது தமிழ்மக்களுக்கு உதவக்கூடிய அறக்கட்டளையை ஆரம்பிக்க ஆயத்தமாக உள்ளோம்.


கனடாவிலும் இலங்கையிலும் வாழும் எமது மக்களை ஒன்றிணைக்கவும் அவர்களுக்கு உதவுவதற்கும் சேவை செய்வதற்குமென உருவாக்கப்படும் ஈகை அறக்கட்டளை அரசியல், மற்றும் மதச்சார்பற்ற மனிதாபிமான அமைப்பாக நம்பகத்தன்மையுடனும் மிகவும் வெளிப்படையாகவும் இயங்கும்.

2016ஆம் ஆண்டு டிசம்பர், 30ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தபடி, 2019ஆம் ஆண்டு தொடக்கம் வரும் ஐந்து ஆண்டுகளுக்குக் கிடைக்கவிருக்கும் ஒருமில்லியனுக்கும் சற்றுக் கூடுதலான நிதியைக்கொண்டு ஈகை அறக்கட்டளையை உருவாக்குகின்றோம். ரீவீஐ-யின் சொத்துக்களை வாங்கியவரிடமிருந்து எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மாதாந்தம் கிடைக்கவிருக்கும் நிதி இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.


கனடாவிலும் இலங்கையிலும் வாழும் எமது மக்களை ஒன்றிணைக்கவும் அவர்களுக்கு உதவுவதற்கும் சேவை செய்வதற்குமென உருவாக்கப்படும் ஈகை அறக்கட்டளை அரசியல், மற்றும் மதச்சார்பற்ற மனிதாபிமான அமைப்பாக நம்பகத்தன்மையுடனும் மிகவும் வெளிப்படையாகவும் இயங்கும். அதுமட்டுமல்ல, புலம்பெயர்ந்து உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து தாம் வாழுகின்ற நாடுகளிலும் இலங்கையிலுமுள்ள எம்மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கு ஈகை அறக்கட்டளை ஒரு முன்மாதிரியாக அமையுமென்பது எமது நம்பிக்கையும் விருப்பமுமாகும்.


முன்னாள் ரீவீஐ பங்குதாரர்களும் பணிப்பாளர்சபை அங்கத்தவர்களுமாகிய நாம், சோர்வடையாது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்களுடன் இணைந்து எமது மக்களுக்கு இப்போது மிகவும் தேவைப்படும் உதவிகளைச் செய்யக்கூடிய சமூக அறக்கட்டளையொன்றைக் கணிசமான நிதியுடன் உருவாக்க முடிந்ததையிட்டுப் பெருமையும் மகிழ்ச்சியுமடைகிறோம். ஈகை அறக்கட்டளையின் செயற்பாடு, நோக்கம், அதை நிர்வகிக்கும் முறை, உதவித்திட்டங்களைச் செயற்படுத்தவிருக்கும் பாங்கு என்பனபற்றி WWW.EEKAI.ORG என்ற எமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் மேற்கொண்டு இயங்கும்போது எமது அனைத்து நடவடிக்கைகளும் இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும்.


முன்னாள் ரீவீஐ மற்றும் ஈகை அறக்கட்டளையின் பணிப்பாளர்சபைத் தலைவர் டொக்டர். வீ. சாந்தகுமார் கூறுகிறார்.


“முன்னாள் ரீவீஐ நிறுவனத்தின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம். நாம் உங்களுக்கு வாக்குறுதியளித்தபடி ஈகை அறக்கட்டளையைத் தோற்றுவிக்கும் இந்நாள் கனேடியத் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பெருமைக்குரிய நாளாகும். முன்னாள் ரீவீஐ நிறுவனம் ஈகை அறக்கட்டளைக்கு வழங்கும் பணம் நாம் எதிர்நோக்கும் பெருமளவிலான மனிதாபிமானப் பணிகளுக்கான ஆரம்ப நிதியாகும். இலங்கை, கனடா மற்றும் நாடுகளிலுள்ள உதவி தேவைப்படும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு சேவையாற்றவிருக்கும் ஈகை அறக்கட்டளையின் வெற்றிக்கு முழுச்சமூகமும் இணைந்து தோள்கொடுக்குமென்று நாம் உறுதியாக நம்புகிறோம்.”


ஈகை அறக்கட்டளையை ஓர் இலாபநோக்கற்ற அமைப்பாகப் பதிவுசெய்வதற்குரிய சட்ட நடிவடிக்கைகளை மேற்கொள்ளவும் வெளிப்படையான உயரிய கொள்கைகளுடன் அதை நிர்வகிப்பதற்கான வழிகாட்டலுக்குமென ஈகை அறக்கட்டளை திரு. TARAS KULISH அவர்களின் சேவையைப் பெறுகிறது. இவர் ரொரன்ரோவில் இயங்கும் STEINBERG TITLE HOPE & ISRAEL LLP என்ற சட்ட நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்.


“கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் வாழும் ஆயுதப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் மிகவும் தேவைப்படுகின்ற சமூகஉளவியல் உதவி, மற்றும் மனிதாபிமான உதவிகளை ஈகை அறக்கட்டளை வழங்குமென்று நாம் உறுதியாக நம்புகிறோம்”

என்கிறார் TARAS KULISH.


“ஈகை அறக்கட்டளை கனடாவிலும் இலங்கையிலும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. இது உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும்.”


ஒவ்வொரு கனேடியத் தமிழ்ச் சமூகத்தவரும் ஈகை அறக்கட்டளையில் ஏதாவதொரு வகையில் பங்குபற்றுவதை நாம் விரும்புகிறோம். இது எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உங்கள் அறக்கட்டளை.


மேலதிக தகவல்களுக்கு, INFO@EEKAI.ORG என்ற மின்னஞ்சல்மூலம் தொடர்புகொள்ளவும்.


டொக்டர். வீ. சாந்தகுமார்

பணிப்பாளர்சபைத் தலைவர்.


டொக்டர். கிருபாலினி கிருபாகரன்

பணிப்பாளர்சபைச் செயலாளர்.

94 views0 comments

Recent Posts

See All

Comentários


Os comentários foram desativados.
bottom of page